Saturday, February 17, 2007

5..4..3..2..1..0

5..4..3..2..1..0


‘எனக்காக உன் காதலை விட்டுக் கொடு’
என்று கண்ணீரோடு கையேந்துகிறாய்.
உன் ஒரு விழிநீரை நானும்,
மறு விழிநீரை என் காதலும்,
துடைத்துவிட்டு விலகினோம், கண்ணீரோடு!



நொடிகளெங்கும் உன் நினைவுப்பூக்கள்.
சுற்றி சுற்றி வருகிறதென் இதயமுள்.
என் வாழ்க்கைக் கடிகாரமும்
ஓடிக்கொண்டு தான் இருக்கிறது!



உன்னிடமிருந்து என் மனதை
திசை திருப்பினேன்…
திசையெங்கும் நீ!



பழகப் பழக பாலும் புளிக்குமாம்…
விலகியப் பின்னும் இனிக்கிறாயடி!



நான், நீயிலி*!



“ “

( உன் மௌனத்தை விட சோகமானக் கவிதை என்னிடமில்லை! )

அழியாத அன்புடன்,
Praba

*நீயிலி – நீ இல்லாதவன்.
(பெயரிலி – பெயர் இல்லாதவர் போல!)

3 comments:

Unknown said...

Dear praba,

can i get your email id plz?

or plz drop a mail to arutperungo@arutperungo.com

Regards,
ArutperungO

Anonymous said...

"அழியாத அன்புடன்" - Athai kooda oru manushan copy adipaan..!!

Chinnapullathanama illa irukku!! Ayoo.. Ayyoo..!!!

-Anand

G.Ragavan said...

என்னங்க இது...சொந்தமா ஏதாச்சும் எழுதக் கூடாதா? அடுத்தவன் கொழந்தைக்குச் சொந்தம் கொண்டாடுறீங்களே...என்னாச்சு?